இடுகைகள்

இறுதி வாழ்த்துக்கள் மற்றும் ஆசி (பிலே 1: 23-25)

இறுதி வாழ்த்துக்கள் மற்றும் ஆசி ( பிலே 1: 23-25): இயேசு கிறிஸ்துவுக்காக எப்பாப்பிராவும் தன்னோடு சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் , அவர் அவர்களுக்கு வாழ்த்து கூறுகிறார் என்றும் பிலேமோனுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் பவுல் எழுதுகிறார் . மாற்கு , அரிஸ்தர்க்கு , தோமா ( தேமா ), லூக்கா போன்றோரும் அவர்களுக்கு வாழ்த்துரைக்கிறார்கள் எனவும் , அவர்கள் தன்னோடு பணியாற்றுகிறார்கள் எனவும் பவுல் குறிப்பிடுகிறார் . கொலோசெ சபையின் உறுப்பினர்களில் எப்பாப்பிராவும் ஒருவர் , பவுலுடன் சேர்ந்து ஊழியத்தில் உண்மையுள்ளவராக இருந்தார் மற்றும் சபை மக்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்து பவுலுக்கு கூறினார் ( கொலோ 1:7, 8). எப்பாப்பிரா , கொலோசெயர்களில் ஒருவராகவும் கிறிஸ்துவின் ஊழியராகவும் இருந்து , அவர்கள் சார்பாக எப்போதும் ஜெபத்தில் போராடினார் , அவர்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும் , தேவன் விரும்புகிறவைகளை அவர்கள் பெற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்தார் ( கொலோ 4:12). மாற்கு என்பவர் அநேகமாக ப் பர்னபாஸின் உறவினராக இ...

உறுதியளிப்பு மற்றும் இறுதி விருப்பம் (பிலே 1: 19-22)

உறுதியளிப்பு மற்றும் இறுதி விருப்பம் ( பிலே 1: 19-22): பவுல் இறுதியாகப் பிலேமோனிடம் , தான் பவுல் , தானே தன் கையால் அவருக்கு இதனை எழுதுவதாகவும் , தான் ஒநேசிமுவின் கடனைத் தீர்த்துவிடுவேன் எனவும் , அவர்கள் வாழ்வுக்காக அவர்கள் தன்னிடம் கடன்பட்டுள்ளதைப் பற்றித் தான் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்றும் எழுதுகிறார் . பவுல் தானே கடிதம் எழுதினார் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்துகிறார் , மேலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர் செலுத்தத் தயாராக இருப்பதாக அவருக்கு மீண்டும் உறுதியளிக்கிறார் . பவுல் மூலம் பெற்ற நற்செய்தியின் நன்மைக்காகப் பிலேமோனும் அவரோடு இருப்பவர்களும் அவருக்கு எவ்வாறு கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறார் . பிறகு பவுல் பிலோமோனை என் சகோதரரே என்று அழைத்து , ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் தனக்குச் செய்யப்படும் ஒரு உதவியாக அவர் அதைச் செய்ய வேண்டும் எனக் கேட்பதாகவும் . கிறிஸ்துவுக்குள் தன் இதயத்தை ஆறுதல்படுத்துமாறும் குறிப்பிடுகிறார் . பவுல் பில...