இறுதி வாழ்த்துக்கள் மற்றும் ஆசி (பிலே 1: 23-25)
இறுதி வாழ்த்துக்கள் மற்றும் ஆசி (பிலே 1: 23-25):
இயேசு
கிறிஸ்துவுக்காக எப்பாப்பிராவும் தன்னோடு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்
என்றும், அவர் அவர்களுக்கு வாழ்த்து கூறுகிறார் என்றும் பிலேமோனுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் பவுல் எழுதுகிறார். மாற்கு, அரிஸ்தர்க்கு, தோமா (தேமா), லூக்கா போன்றோரும் அவர்களுக்கு வாழ்த்துரைக்கிறார்கள்
எனவும், அவர்கள் தன்னோடு பணியாற்றுகிறார்கள் எனவும் பவுல் குறிப்பிடுகிறார். கொலோசெ சபையின் உறுப்பினர்களில் எப்பாப்பிராவும் ஒருவர், பவுலுடன் சேர்ந்து ஊழியத்தில் உண்மையுள்ளவராக இருந்தார் மற்றும் சபை மக்கள் பரிசுத்த ஆவிக்குள் கொண்டிருக்கும் அன்பைக் குறித்து பவுலுக்கு கூறினார் (கொலோ 1:7, 8). எப்பாப்பிரா, கொலோசெயர்களில் ஒருவராகவும் கிறிஸ்துவின் ஊழியராகவும் இருந்து, அவர்கள் சார்பாக எப்போதும் ஜெபத்தில் போராடினார், அவர்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும், தேவன் விரும்புகிறவைகளை அவர்கள் பெற வேண்டும் என்றும் அவர் பிரார்த்தித்தார் (கொலோ 4:12). மாற்கு என்பவர் அநேகமாகப்
பர்னபாஸின் உறவினராக இருந்த ஜான் மார்க்காக இருக்கலாம், மேலும் அரிஸ்தர்க்கு கிறிஸ்துவுக்காகச்
சிறைவைக்கப்பட்டவரில்
ஒருவராக இருக்கலாம் (கொலோ 4:10). தேமாவும் பவுலின் கூட்டாளிகளில் ஒருவராக இருந்தார் (கொலோ 4:14), மற்றும் அவர் இந்த உலகை மிகுதியாக நேசித்தார். அதனாலேயே அவர் பவுலை விட்டுப் போனார். அவன் தெசலோனிக்கே நகரத்துக்குப் போனார். (2 தீமோ 4:10). லூக்காவின் நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர்களின் நடபடிகளை எழுதிய மருத்துவர் லூக்காவே பவுலோடு இருந்து இங்கே இடம் பெற்றவர் (2
தீமோ. 4:11). அவர்கள் நான்கு பேரும் பவுலுடன் சேர்ந்து ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள், மேலும் பிலேமோனுடனும் அவருடைய வீட்டில் கூடும் சபையுடனும் அவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.
பிறகு,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை அவர்களின் ஆவியோடு இருக்கட்டும் என்ற இறுதி ஆசியுடன் பவுல் தனது கடிதத்தை முடிக்கிறார். அப்போஸ்தலர் பவுல் தனது நிருபங்களை இறுதி ஆசியுடன் முடிப்பது அவருக்கு வழக்கமான ஒன்றாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை பூமியில் வாழும் இந்த வாழ்க்கையின் போது எல்லா பாவங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும்
நாம் விடுவிக்கப்படுவதற்கு
மிகவும் போதுமானது. மேலும் அது பிலேமோன், அப்பியா, அர்க்கிப்பு மற்றும் சபையில் உள்ள அனைவரின் ஆவியுடன் இருக்க வேண்டும் என்று பவுல் விரும்புகிறார்.
சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்
1.
எப்பாப்பிராவைப் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
2.
எப்பாப்பிரா என்பவர் யார்?
3.
மாற்கு யார்?
4.
அரிஸ்தர்க்கு யார்?
5.
தோமா யார்?
6.
லூக்கா யார்?
7.
மாற்கு, அரிஸ்தர்க்கு, தோமா மற்றும் லூக்காவைப் பற்றி என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
8.
பவுலின் இறுதி ஆசீர்வாதம் என்ன?
கருத்துகள்
கருத்துரையிடுக