ஒநேசிமுவை ஒரு பணியாளராக ஏற்க பரிந்துரை (பிலே 1: 11-14)
ஒநேசிமுவை ஒரு
பணியாளராக ஏற்க
பரிந்துரை (பிலே
1: 11-14):
பவுல்
பிலேமோனிடம், ஒநேசிமு கடந்த காலத்தில் அவருக்குப் பயனற்றவனாக இருந்தான். ஆனால் இப்பொழுதோ அவர் அவருக்கும் தனக்கும் பயனுள்ளவர் என்று குறிப்பிடுகிறார். பவுல் பிலேமோனிடம் ஒநேசிமுவை திருப்பி அனுப்புவதாகவும், அவரது இதயத்தையும் சேர்த்து அனுப்புவதாகவும் தெரிவிக்கிறார். ஒநேசிமு, பிலேமோனின் அடிமை ஊழியர்களில் ஒருவராக இருந்து, அவரது சுயநல ஆசைகள் மற்றும் நலன்களின் காரணமாக நேர்மையற்று, உண்மையற்று, பொறுப்பற்று இருந்திருக்கக்கூடும். ஒநேசிமு மற்றும் அவரது பணிகள் குறித்து பிலேமோன் நிச்சயமாக வருத்தப்பட்டிருப்பார். ஆனால் பவுலுடன் தொடர்பு கொண்ட பிறகும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பும், அவருடைய மனப்பான்மையும், அவருடைய செயல்களும் மேம்பட்டு, பவுலுக்குப் பலனளிக்கின்றன. பாரமான இதயத்துடன் ஒநேசிமுவை பிலேமோனிடம் பவுல் திரும்ப அனுப்புகிறார். அடிமைகள் தங்கள் பணிக்காலம் முடியும் வரை அல்லது எஜமானர் அவர்களை விடுவிக்கும் வரை தங்கள் எஜமானர்களுக்கு அடிபணிய வேண்டும் என்பது வழக்கமாக இருந்ததால், பவுல் ஒநேசிமுவை பிலேமோனிடம் திருப்பி அனுப்ப விரும்பினார்.
நற்செய்திக்காகச்
சிறையில் இருந்தபோது பிலேமோனின் சார்பாக அவருக்குச் சேவை செய்வதற்காக ஒநேசிமுவை தன்னுடன் வைத்திருப்பதில் மகிழ்ச்சியடைவதாகப் பவுல் ஒநேசிமு மீது தனது பாசத்தை வெளிப்படுத்துகிறார், ஆனால் அவரின் அனுமதியின்றி எதையும் செய்ய விரும்பவில்லை. அதற்குப் பின்பு தனக்காகப் பிலேமோன் செய்கிற நல்ல காரியங்கள், தன்னுடைய வற்புறுத்தலுக்காக அல்லாமல் அவராகவே விரும்பிச் செய்தவையாக இருக்க வேண்டுமெனப் பவுல் ஆர்வம் கொண்டார். ஒநேசிமுவின் மாற்றத்தால் பவுல் மிகவும் ஈர்க்கப்பட்டார், மேலும் அவரது சேவையால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார், இது அவரைத் தன்னுடன் வைத்திருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. பிலேமோன் பவுலுக்கு ஒரு நல்ல நண்பராகவும், உடன் பணிபுரிபவராகவும் இருப்பதால், நற்செய்தியின் நிமித்தம் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நேரத்தில் பிலேமோனே நேரடியாகச் சேவை செய்வது போன்று ஒநேசிமு தன்னுடன் தொடர்ந்து இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். அதே சமயம், பவுல் தனது நலனுக்காக அதிகாரத்தையும் உறவையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை, மாறாக, பிலேமோனின் விருப்பத்தின்படி முழு மனதுடன் அவரே தீர்மானிக்க வழியுறுத்துகிறார். மறுபுறம், ஒநேசிமு பயனுள்ளவராக இருந்ததால், அவரை ஏற்றுக்கொள்ளச் செய்யும்படி பிலேமோனை தயார்படுத்தி வற்புறுத்துவதற்காகப்
பவுல் இவ்வாறு வலியுறுத்துகிறார் மற்றும் மிகைப்படுத்துகிறார்.
சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்
1.
பவுல் ஒநேசிமுவை எங்கே அனுப்புகிறார்? ஏன்?
2.
ஒநேசிமுவை அனுப்புவதைப் பற்றிப்
பவுல் என்ன குறிப்பிடுகிறார்? ஏன்?
3.
பவுல் எந்த விதத்தில் சந்தோஷப்படுவார்?
4.
பிலேமோனின் சார்பாக ஒநேசிமஸ் எப்படி பவுலுக்கு சேவை செய்திருக்க முடியும்?
5.
பவுல் எதை விரும்பினார்?
6.
பிலேமோனின் அனுமதியின்றி பவுல் ஏன் எதையும் செய்ய விரும்பவில்லை?
7.
‘நன்மை நிர்ப்பந்தமாக இல்லாமல், தன்னிச்சையாக இருக்கலாம்’ என்று பவுல் கூறுவதன் அர்த்தம் என்ன?
8.
வற்புறுத்தலின்றி மற்றவர்களுக்கு நாம் எப்படி இரக்கத்தையும் நன்மையையும் காட்டுவது?
எப்படி நம்முடைய சுயநலங்களைத் தவிர்ப்பது அல்லது நம் நலனுக்காக மற்றவர்களைச் சுரண்டுவதைத் தவிர்ப்பது மற்றும் எந்த நிலையிலும் சரியானதைச் செய்வது எப்படி?
கருத்துகள்
கருத்துரையிடுக